அழகு என்பதற்கான வரையறைகளில் ஒன்றாக உடல் எடை மாறிவிட்டாலும், உண்மையில் ஆரோக்கியத்திற்கும் உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதால், வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
பல்வேறு ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரும் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால், ஊட்டச்சத்து மிகுந்த வாழை, உடலை ஊதவும் செய்துவிடும்
அரிசியை நமது உணவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். நமது அரிசி நுகர்வானது பிற உணவுகளை விட அதிகமாக இருப்பதால் தான் உடல் எடை பிரச்சனை பெரியதாக இருக்கிறது
உடலுக்கு நல்லது என்று சொல்லப்படும் உலர் பழங்கள், உடலுக்கு நன்மை செய்தாலும், அதிகமாக சாப்பிட்டால், குண்டாவதை யாராலும் தடுக்க முடியாது
புரதச்சத்து தான் உடல் எடைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும், புரதம் சேர்த்த மில்க்ஷேக், ஸ்மூத்தி போன்றவை சட்டென்று உடலை குண்டாக்கிவிடும்
உடல் பருமனாக இருப்பவர்கள், முடிந்த அளவு சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும்
வாயுவை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கப்படும் உருளைக்கிழங்கு, உடலை ஊதவும் செய்துவிடும்
நார்ச்சத்து அதிகம் கொண்ட அற்புதமான பழமாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டால், பருமனை அதிகரிக்கும்
அதிக ஊட்டச்சத்தான முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் சத்துக்கள், உடலை ஊத வைக்க முக்கியமான காரணமாகின்றன
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை