ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடை அதிகரித்தால் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற தீவிர நோய்கள் நம்மை பற்றிக்கொள்ளக்கூடும்.
உடல் எடையை கட்டுப்படுத்த நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சிகள் என்று வரும் பொழுது பெரும்பாலானோர் நடைப்பயிற்சியை சிறந்ததாக கருதுகிறார்கள்.
ஜிம் சென்றோ அல்லது வீட்டிலோ பிற உடற்பயிற்சியை செய்ய முடியாதவர்கள் கூட எளிதாக நடைப்பயிற்சி செய்யலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எப்பொழுது நடைபயிற்சி செய்ய வேண்டும்? காலையிலா? மாலையிலா?
காலை, மாலை என எப்போது நடந்தாலும் அது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
காலையில் விரைவில் எழுந்திருப்பவராக இருந்தால் நீங்கள் காலையில் நடக்கலாம். அல்லது உங்களுக்கு இரவில் ஆற்றல் அளவு அதிகமாக இருக்கும் என்றால் இரவிலும் நடக்கலாம்.
உங்கள் வேலை, வாழ்க்கை முறை, உங்கள் உடலில் ஆற்றல் எப்பொழுது அதிகமாக இருக்கும் ஆகியவற்றை பொறுத்து இதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். இதை பாதியிலேயே நிறுத்தாமல் கடைபிடிப்பதுதான் முக்கியம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.