நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நாட்பட்ட நோய் அல்சைமர். மறதி நோய் என்றும் இது அறியப்படுகிறது
அல்சைமர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் செப்டம்பர் 21
ஒருபோதும் அவசரமும் வேண்டாம், தாமதமும் வேண்டாம்
வயதானவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும். மாற்ற முடியாத விஷயங்களை நினைத்து கவலைப்படுவதில் பயனில்லை
உடற்பயிற்சி செய்வது போல் ஓய்வும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓய்வு மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
இயற்கை உணவு மற்றும் புதிதாக சமைத்த உணவை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பது நல்லது
அதிகப்படியான மது அருந்துதல் மூளைக்கு ஆபத்தானது
பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள், இது மூளைக்கு ஒரு டானிக்காக செயல்படும்
தினசரி தியானம் மற்றும் வாரத்திற்கு குறைந்தது 5 முதல் 6 நாட்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்