சீரகத்தில் கால்சியம், தாமிரம், பொட்டாசியம், இரும்புச்சத்து, சிங்க், மெக்னீசியம், நார்ச்சத்து என பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சீரகத் தண்ணீர் அஜீரணம், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். இது செரிமானத்தை சீராக்கும்.
காலையில் வெதுவெதுப்பான சீரக நீரை உட்கொண்டால் உடலின் வளர்ச்சியை மாற்றம் மேன்மை அடையும்.
வெறும் வயிற்றில் சீரக நீரை உட்கொள்வதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு தொப்பை கொழுப்பு குறையும்.
சீரகத் தண்ணீர் பசியை குறைத்து வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளித்து உடல் எடையை குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக சீரக நீர் குடிக்கலாம். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக வெளியேற்றும்
சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் சருமத்தை பாதுகாத்து, சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும்.