உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் பலருக்கு உடல் பருமன் பெரிய பிரச்சனையாக உள்ளது.
அதிகரிக்கும் எடை சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது.
உடல் பருமனால் சிரமப்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சில எளிய வழிகளை பின்பற்றினால், சில நாட்களிலேயே குறிப்பிடத்தக்க வகையில் உடல் எடையை குறைக்க முடியும்.
தினமும் காலையில் 15 நிமிடம் நடப்பது உடல் எடையை குறைக்கவும், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் பெரிதும் உதவும்.
காலையில் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
உங்கள் உணவில் அதிக அளவு உலர் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஊறவைத்த பாதாம் பருப்புடன் உங்கள் நாளைத் தொடங்கினால், உடல் எடை கணிசமாக குறையும்.
தினமும் சீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் கொழுப்பு படியாமல், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.