எலும்புகளை வலுப்படுத்தும் வைட்டமின் டி -இன் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி. ஆனால் சூரிய ஒளி இல்லாத குளிர்காலத்தில், வைட்டமின் குறைபாடு ஏற்படலாம்.
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு முறிவுகள், ஆஸ்டியோபோரோசிஸ், மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காவிட்டால், சில உணவுகளின் மூலம் இயற்கையான வழிகளில் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யலாம்.
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டைப் போக்கலாம்.
வைட்டமின் டி குறைபாட்டை போக்க, முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்ளலாம். இது வைட்டமின் டியின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது.
உடலில் வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்ய, பால், ஆரஞ்சு சாறு, தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
காட் லிவர் ஆயில் வைட்டமின் டியின் நல்ல மூலமாக உள்ளது. வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய இதை தினமும் உட்கொள்ளலாம்.
வைட்டமின் டி குறைபாட்டை போக்க காளான்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.