நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாய் அமையும் சிறு தானியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பல முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள சிறு தானியங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த சர்க்கரையையும் சமநிலைப்படுத்துவதற்கு ஏற்றவை.
ராகியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி இரத்த சர்க்கரையின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
கம்பு இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கவும், தேவையான ஆற்றலுக்கான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்தை வழங்கவும் உதவுகிறது.
ஜோவரில் உள்ள அதிக நார்ச்சத்து அதன் செரிமானத்தை மெதுவாக்கி, சாப்பிட்ட உடனேயே இரத்த சர்க்கரையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை தடுக்கிறது.
குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட சாமை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஏற்றது. அரிசிக்கு ஒரு சிறந்த மாற்றாக இதை பயன்படுத்தலாம்.
குதிரைவாலியில் அதிக நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது.
அதிக அளவில் சிறு தானியங்களை உட்கொண்டால் அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து, அதற்கேற்ப அவற்றின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனை இதில் அவசியம்.