கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தினமும் காலையில் வெந்நீர் குடிப்பது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். வெந்நீர் உடல் எடை கட்டுப்பாட்டிலும் உதவுகிறது.
பூண்டில் அலிசின் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய பாதுகாப்பை உறுதி செய்யும் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு உள்ளவர்கள் ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்ளலாம். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.
சால்மன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன்களை கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் உட்கொள்ளலாம். இது அதிக கொழுப்பை கரைக்க உதவும்.
ஆளிவிதைகளில் ஆல்ஃபா-லினோலெக் அமிலம் உள்ளது. இது எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.