நம் உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறையும் போது, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல பாதிப்புகள் உண்டாகின்றன.
பீட்ரூட்டில் உள்ள பெட்டானின் LDL என்னும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கு திறன் பெற்றது. இதய தமனிகள் ஏற்படும் அடைப்பில் இருந்தும் காக்கிறது.
பச்சை நிற காய்கறிகளில் இரும்புச் சத்து நிறைந்திருக்கும் நிலையில், அவை இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தமனிகள் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ்களில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமது நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது.
நார்சத்து நிறைந்த ஆப்பிள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் அதோடு இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பையும் நீக்கும்.
ஆம்லா என்னும் நெல்லிக்காயை தொடர்ந்து 12 வாரங்கள் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு முற்றிலும் கட்டுக்குள் இருக்கும்
மாதுளை கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்துவதோடு, இதய இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பையும் நீக்கும்.
உணவின் சுவையை அதிகரிக்கும் பூண்டு, கொலஸ்ட்ராலை எரித்து மாரடைபு ஏற்அடும் அபாயத்தை தடுக்கிறது.
காலை உணவில் ஓட்ஸைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்டிராலை குறைப்பதோடு, உடல் எடையும் குறையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.