உடல் நன்றாக செயல்பட கொழுப்பு தேவை என்றாலும், இரத்தத்தில் அதிகப்படியான கெட்ட கொழுப்பு இருந்தால் அது ஆரோக்கியத்தை மோசமாக்கும்
அதிகமாக கெட்ட கொழுப்பு உள்ள ஆண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளில் கால்கள் மற்றும் நகங்களில் மாற்றங்கள் தென்படும்
நகத்தின் நிறம் வெளிர் நிறமாக மாறினால், அது ஆண்களுக்கு அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த ஓட்டம் குறைவதை இந்த நிற மாற்றம் சுட்டிக்காட்டலாம்
சருமங்களில் நிறம் வெளுத்துப்போனால் அது இரத்தசோகை அல்லது இரத்தவோட்டம் குறைவதை காட்டுவது போல, நகங்களிலும் இந்த அறிகுறிகள் தோன்றும்
தடிமனாக மாறுவது கொழுப்பு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம். இது உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்
ஒரு நுட்பமான, ஆனால் முக்கியமான அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்ட நக வளர்ச்சி உதவும். நக வளர்ச்சி மந்தமானால் ஆரோக்கியம் குறைவுக்கான காரணமாக இருக்கலாம்
எளிதில் உடையும் நகங்கள், இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதைக் காட்டும் அறிகுறி...
சாந்தோமாஸ் என்பது தோலுக்கு அடியில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் வெளிப்பாடு ஆகும். இது நகத்தை மஞ்சள் நிறமாக மாற்றும், உடலில் 'கெட்ட' கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பதை இது சுட்டிக்காட்டும்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை