மனம், உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு காரணமாகும் உணவே, அவை கெட்டுப்போவதற்கும் காரணமாகிறது.
ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்பது அவசியம் என்று சொல்வதைப் போல, சில உணவுகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை
அவற்றில் சில, உங்கள் மூளையை படிப்படியாக பலவீனப்படுத்தி ஒரு கட்டத்தில் மிகவும் மோசமானதாக மாற்றிவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
நாம் சாப்பிடும் சில பொருட்கள் எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குத் தெரியாது.
நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது அவசியமே இல்லை. அவற்றை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்
இனிப்பு சேர்க்கப்பட்டு, கார்பனேற்றப்பட்ட பானங்கள் உடலுக்கு அவசியமே இல்லாதது. அதை ஒருபோதும் குடிக்காதீர்கள்
புகையிலை மற்றும் சிகரெட்டுகள் உங்கள் மூளையை பாதிக்கும் என்பதால் முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது
பொரித்த உணவுகளை தினமும் சாப்பிடுவது வயிற்றைக் கெடுக்கும் என்பதுடன் நாளடைவில் மூளை செயல்பாட்டையும் பாதிக்கும்
அதிக உப்பு நிறைந்த காரப்பொருட்களை உண்ணக்கூடாது, ஏனெனில் அவற்றில் இருக்கும் அதிக அளவிலான உப்பு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது