நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகளில் ஹெச்டிஎல் என்பது நல்ல கொழுப்பு என்றால், எல்டிஎல் என்பது கெட்ட கொழுப்பு. கெட்ட கொழுப்புதான் ரத்த நாளங்களில் படிந்து ஆரோக்கியத்தை சீர் கெடுக்கிறது
உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தால், வீட்டு வைத்தியமும் கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
சில பச்சை இலைகளில் கொழுப்பைக் கரைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன, அவை நமது உடலின் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவியாக இருக்கும்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. தினமும் 8-10 இலைகளை உணவில் சேர்க்கலாம்
ஆக்ஸிஜனேற்ற மற்றும் அந்தோசயனின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ள ஜாமூன் இலைகள், நரம்புகளில் குவிந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த இலையை காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம்
சர்வரோக நிவாரணி என அறியப்படும் வேப்பிலையில் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. தினசரி காலையில் 5-6 கொழுந்து வேப்பிலைகளை மென்று தின்றால் பல நோய்கள் உங்கள் பக்கமே வராது
சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயக்கீரையில் உள்ள துவர்ப்பு கலந்த சுவை பலருக்கும் பிடிக்காது என்றாலும், வாரம் இரு முறை வெந்தயக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் கெட்ட கொழுப்பு கட்டுப்படும்
உணவின் சுவையை மேம்படுத்தும் கொத்தமல்லி, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை குணப்படுத்தலாம்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை