இலவங்கப்பட்டை (Cinnamon) வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, தொப்பை சதையை குறைத்து எடையை இழப்பதில் உதவுகிறது.
வெந்தய நீரை குடித்து வந்தால், நம் உணவால் நம் உடலில் சேரும் கொழுப்பு எளிதாக கரையும், எடையும் குறையும்
இஞ்சி டீ அல்லது இஞ்சி நீர் குடிப்பதால் தொப்பை சதை குறைந்து உடல் எடையும் குறைகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
சீரகத்தில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேடரி, ஆண்டி-மைக்ரோபியல் பண்புகள் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
மிளகில் உள்ள பிபேரின் நம் உடலில் உருவான கொழுப்பை எளிதில் குறைத்து எடை குறையாமல் தடுக்கின்றது.
மஞ்சளில் உள்ள கர்க்யூமின் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உடல் உப்பசத்தை குறைத்து எடை குறைய (Weight Loss) உதவுகிறது.
ஏலக்காயில் ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் உப்பஸ எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நீரிழிவு நோய் மற்றும் உடல் உப்பசத்தால் போராடும் பெண்களுக்கு ஏற்றது.
மிளகாயில் சரியான அளவு கேப்சைசின் உள்ளது. இது உடலில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கொழ்ப்பை நீக்கும் வல்லமை கொண்டது.
பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட செம்பருத்தி டீ குடிப்பதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
கற்றாழை சாற்றில் உள்ள பண்புகள் தொப்பையில் சேரும் கொழுப்பை (Belly Fat) கரைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.