கீன்வா (Quinoa) எனப்படும் சீமைத்தினையில் முழு அளவு புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கவும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. இது காலை உணவுக்கு மிகவும் உகந்தது.
கைக்குத்தல் அரிசியில் (Brown Rice) வெள்ளை அரிசியை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் ஒரு களஞ்சியமாகும்.
நார்ச்சத்து அதிகமாகவும், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நல்ல அளவிலும் இருக்கும் பார்லி (Barley) உடல் நலனுக்கு மிகவும் தேவையான ஒரு தானியமாகும்.
கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் புல்கூர் கோதுமையில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதன் உப்புமா மிக சுவையாக இருக்கும்.
பழங்கால தானியமான ஃபார்ரோ உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் அதிக அளவு புரதச்சத்து, நார்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
தினை (Millets) க்ளூட்டன் இல்லாத தானியமாகும். இவற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடெண்டுகளும் வைட்டமின்களும் உள்ளன. இவை எடல் எடையை குறைக்க உதவுகின்றன.
இவற்றில் நார்சத்து, புரதச்சத்து மற்றும் கால்சியம், இரும்புச்சத்து போன்ற மினரல்கள் அதிக அளவில் உள்ளன. இது பசையம் இல்லாத தானியமாகும்.
கோதுமை குடும்ப வகையை சேர்ந்த ஸ்பெல்ட் (Spelt) ப்ரெட், பாஸ்தா போன்றவற்றில் பயன்படுகின்றது. இதில் நார்ச்சத்து அதிகம்
Wild Rice உடலுக்கு அதிக அளவு ஊட்டசத்தை அளிக்கும் ஒரு பழைய வகை அரிசியாகும். இதில் ஆண்டி ஆக்சிடெண்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளது.