ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சேர்மன்கள் கொண்ட கிரீன் டீ (Green Tea) உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும்
உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கும், உங்கள் உடலை சுத்தப்படுத்துவதற்கும் காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீரை குடிக்கலாம்.
காபியில் உள்ள காஃபின் உங்கள் வளர்சிதை மாற்றத்தை தற்காலிகமாக அதிகரிக்கும், கலோரிகளை அதிகமாக எரிக்கும்.
இஞ்சியில் தெர்மோஜெனிக் பண்புகள் உள்ளன, இது உங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்துகிறது, உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் புத்துணர்ச்சியூட்டும் இந்த பானத்தை உருவாக்க ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலக்கவும்.
உங்கள் வயிற்றைத் சுத்தப்படுத்தவும், செரிமானத்திற்கு உதவவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஒரு கப் புதினா டீ போதும்.
தர்பூசணியில் அர்ஜினைன் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது. இது கொழுப்பை எரிப்பதை அதிகரிப்பதாகவும், வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீரகம் LDL கொழுப்பின் அளவை மேம்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.
காலையில் எழுந்தவுடன் இளநீர் குடிப்பதால், உடலில் அதிக கலோரிகளை எரிக்கவும் (Burn Calories), நாள் முழுவதும் வளர்சிதை மாற்றத்தைத் மேம்படுத்தவும் உதவி கிடைக்கும்.
நெல்லிக்காய் நீர் ஒரு அற்புதமான எடை இழப்பு (Weight Loss) பானமாகும், ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.