தக்காளியில் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பைட்டோநியூட்ரியண்ட்ஸ் கரோட்டினாய்டுகள் உள்ள நிலையில், அவை உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க தக்காளி சாறு உதவுகிறது. சிறுநீரகத்தை டீடாச் செய்யவும் இது உதவும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தக்காளி ஜூஸ் மிகச் சிறந்தது. இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தினமும் தக்காளி ஜூஸ் உட்கொள்வது கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும். இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தினமும் தக்காளி சாறு உட்கொள்வது செரிமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க உதவும்.
தக்காளியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளதால், எலும்புகளை வலுவாக இருக்க உதவுகிறது.
வைட்டமின் சி தக்காளியில் அதிகம் உள்ளதால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.