மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதியில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் சில உதவிக்குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
உடல் எடை அதிகமானால் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படும். கீல்வாதத்திலிருந்து நிவாரணம் பெற எடையை குறைப்பது அவசியமாகும்.
கீல்வாத பிரச்சனை உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்படலாம். ஆகையால் இவ்வர்கள் எளிய மற்றும் லேசான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
அதிக சர்க்கரை, க்ளூட்டன், மைதா, ஈஸ்ட் போன்ற உணவு பொருட்களை கீல்வாத நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
மூட்டு வலி, கீல்வாதத்தில் நிவாரணம் காண பழங்காள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ள வேண்டும்.
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காபி, டீ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவற்றால் வாயுத்தொல்லையும் ஏற்படலாம்.
வலியுள்ள இடங்களில் மசாஜ் செய்வதால் தசைகளுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன் இரத்த ஓட்டமும் சீராகும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.