இடுப்புச்சதை மற்றும் உடல் எடை குறைக்க உணவு முறையைத் தவிர உடற்பயிற்சியும் அவசியம்
கொழுப்பைக் குறைக்க ஜிம்மிற்கு செலவு செய்தாலும் அதில் பயன் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது
உடலில் படியும் கொழுப்புகள், பொதுவாக முதலில் இடுப்புப் பகுதியில் படிவதால், தொப்பை என்று செல்லமாக அழைக்கப்படும் தொந்தி உருவாகிறது
பானை வயிறாக ஆகிவிட்டால், அழகும் போச்சு, ஆரோக்கியமும் போச்சு என்று கவலைப்பட வேண்டும்
உடல் எடையைக் குறைக்க வேகமாக ஓடுவது நல்ல பலனைக் கொடுக்கும்
உடல் எடையைக் குறைக்க நல்ல பலனுள்ள வழி கயிறு குதித்தல் எனப்படும் ஸ்கிப்பிங்
நீச்சல் அடிக்கும்போது, உடலின் அனைத்து உறுப்புகளும் செயல்படுவதால் ஆரோக்கியம் ஏற்படுவதுடன், துரிதமாக எடையும் குறைகிறது
வேகமாக நடைப்பயிற்சி தினமும் செய்தால், உடல் எடை குறைவதுடன், தொப்பையும் குறையும்
இரு சக்கர வண்டியை ஓட்டுவதால், கால் சதைகள் வலுப்படுவதுடன் உடல் எடை மற்றும் தொப்பைக் கொழுப்பு குறையும்
தொடர்ந்து 3 மாதம் உறுதியாக இந்தப் பயிற்சிகளில் ஏதாவது இரண்டைச் செய்தால் உடல் எடை சட்டென்று குறையும், அழகான தோற்றம் வாய்க்கும்