ப்ரோட்டீன் அதிகம் உள்ள முட்டை நம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் என பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை மேம்படுத்தும் தன்மை மிளகாயில் உள்ளது.
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சுத்தமாக தயாரிக்கப்பட்ட நெய்யில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது.
கிரீன் டீ உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதால் தினமும் இதை உட்கொள்வது நல்லது
ப்ரொகோலியில் உள்ள க்ளுகோராஃபனின் என்ற பொருள் வளர்சிதை மாற்றத்தை மேம்டுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உணவில் இஞ்சியை சேர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் பசியை கட்டுப்படுத்தவும் உதவும்
புரதச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது.