உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம்.
உடலின் செல்கள் சரியாக செயல்பட B12 தேவை. அதன் குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தி, உடலில் ஆக்ஸிஜன் அளவை பாதிக்கலாம். இதனால், நீங்கள் அடிக்கடி சோர்வாக உணருவீர்கள்.
வைட்டமின் B12குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதிப்பதால், நமது சருமம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. ஏனெனில், இந்த இரத்த சோகையின் அறிகுறிகள் ஏற்படத் தொடங்குகின்றன.
வைட்டமின் B12 இன் குறைபாடு காரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
வைட்டமின் B12 குறைபாடு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால், அது நமது மனநலத்தையும் பாதிக்கிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வைட்டமின் B12 குறைபாட்டினால், தலைவலி அதிகம் ஏற்படலாம். மேலும் நரம்பியல் சார்ந்த பக்க விளைவுகளும்அதிகரிக்கிறது.
வைட்டமின் B12 குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, தினசரி உணவில் இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சைவ உணவு பிரியர்கள் பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் சாப்பிடலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.