வாழைப்பழத்தைப் போலவே, அதன் தோலிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
வாழைப்பழத்தோலில் உள்ள கூறுகள் இது இரத்த அணுக்களின் சிதைவைத் தடுத்து அவற்றை வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இது வயிற்றை சுத்தப்படுத்தி செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
வாழைப்பழ தோலை 3 நாட்களுக்கு சாப்பிட்டால், செரோடோனின் அளவு 15 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் மன அழுத்தம் தீரும்.
பழத்தை விட வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது எடை இழப்புக்கு பெரிதும் கை கொடுக்கும்.
வாழைப்பழத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காரணமாக முகப்பரு, சுருக்கங்கள் நீங்கி முகத்தில் பொலிவு வரும்.
வாழைப்பழத்தோலை சாப்பிட்டால் கண்பார்வை பலப்படும். வாழைப்பழத் தோலில் லுடீன் இதற்கு காரணம்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.