முந்திரிப்பருப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால், முந்திரி பழத்தை பற்றி பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முந்திரிப் பருப்பை போலவே முந்திரி பழத்திலும் ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன.
முந்திரி பழத்தில் புரதச்சத்து, பீட்டா கரோட்டின், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
முந்திரி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட, ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை முந்திரி பழத்தில் நிறைந்துள்ளன.
முந்திரி பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதோடு, நீர் சத்தும் அதிக அளவில் உள்ளதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குகிறது.
முந்திரி பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம் ஆகியவற்றை நீக்கும் ஆற்றல் கொண்டது.
முந்திரி பழம் நீர் தன்மை கொண்ட பழம் என்பதால், மற்ற பழங்களைப் போல மென்று சாப்பிட முடியாது. ஏனெனில் இதில் சாறு அதிக அளவில் உள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.