உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைத்து மூட்டு வலியையும் குறைக்க உதவும் சில இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இஞ்சியில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
வெள்ளரிக்காய் உட்கொள்வதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கிறது. இது உடலில் அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் உதவுகிறது.
தினமும் கிலோய் உட்கொள்வதால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருப்பதோடு, வீக்கம், உடல் வலி போன்ற பிர பிரச்சனைகளும் குணமாகும்.
தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிட்டால், யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும். இது தவிர வேப்பிலை இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.
யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் அதை கட்டுப்படுத்த தனியா தேநீர் குடிக்கலாம். இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து மூட்டு வலியிலும் நிவாரணம் அளிக்கின்றன.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் நெல்லிக்காய் உதவும். நெல்லிக்காயை பொடி, சாறு, சட்னி என பல வகைகளில் உணவில் சேர்க்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.