இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சூப்பர் உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
பீன்ஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் அதிக மெக்னீஷியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றில் உள்ள ஊட்டச்சத்த்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
மெக்னீஷியம் அதிகம் உள்ள ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பார்லி , ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.
மீன்கள் குறிப்பாக கொழுப்பு மீன்களில் அதிக மெக்னீஷியம் உள்ளது. இது தவிர மீன்களில் பொடாஷியம், செலினியம், வைட்டமின் பி மற்றும் பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன.
பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை நீரிழிவு நோயாளிகள் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.