கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரையை போல யூரிக் அமிலமும் உடலில் அதிகமானால், அது உடல் நலனை பாதிக்கும்.
ப்யூரின் அதிகமாக உள்ள உணவுகள் நம் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ப்யூரின் அளவு மிக குறைவாக உள்ள வாழைப்பழத்தை உட்கொண்டால் யூரிக் அமில அளவை குறைக்கலாம்.
குறைந்த கொழுப்புள்ள பால் உடலில் யூரிக் அமில அளவை குறைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
ப்யூரினை உடைக்கும் தன்மை காபிக்கு உள்ளது. ஆகையால் இது யூரிக் அமில நோயாளிகளுக்கு நல்லது.
வைட்டமின் சி அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்கள் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.
யூரிக் அமில நோயாளிகள் தினமும் செர்ரி சாப்பிடலாம். இதில் உள்ள ஏந்தோசயனின் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கும்.