கோடைக்காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குறைந்த கலோரி மற்றும் க்ளைசெமிக் குறியீடு கொண்ட தக்காளி சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
ஆண்டி ஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ள வெள்ளரி சாறில் குறைந்த அளவு கொழுப்பும் சர்க்கரையும் உள்ளன.
வைட்டமின் ஏ, சி அதிகம் உள்ள கேரட் சாறு கொழுப்பை குறைத்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கின்றது
ப்ரோக்கோலி சாறு செரிமானத்தை சீராக்கி இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த காலை பானமாக கருதப்படுகின்றது.
வெந்தய நீரில் நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய கூறுகள் உள்ளன. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இயல்பு நிலையில் இருக்கின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.