இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதோடு, பசியை கட்டுப்படுத்தி கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. செரிமான அமைப்பைத் தூண்டுகிறது.
கருமிளகில் உள்ள பைபரின் கூறு உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
பெருஞ்சீரகம் இயற்கையான டையூரிடிக் மருந்தாக இருப்பதால், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி எடையை குறைக்கிறது.
மஞ்சள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும், உதவுகிறது. அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது.
உணவிற்கு காரத்தை கொடுக்கும் மிளகாய் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரிக்கிறது. செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமான அமைப்பை வலுப்படுத்தி உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.