பகலில் இயங்கி, இரவில் உறங்குவது ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால், இரவில் எப்படி உறங்க வேண்டும்?
பகலில் ஆடை அணிந்தால் போதும். இரவில் அவற்றை களைந்து ஆடையின்றி உறங்குவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆடைகள் இல்லாமல் உறங்குபோது, உடலின் வெப்பநிலை குளிர்ந்து, ஆழ்ந்து உறங்கலாம்.
ஆண்கள் இரவில் ஆடை அணியாமல் உறங்குவதால், அவர்களின் விந்தணுக்கள் செறிவுறுவதும், எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதையும் ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது
ஆடையின்றி உறங்குபவர்களுக்கு இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைகிறது
நிர்வாணமாக உறங்குவதால் ஆழ்ந்த உறக்கம் வருவதோடு, படுத்த உடனே தூங்கும் பழக்கமும் வந்துவிடும்
இரவில் உறங்கும்போது இறுக்கமான, வியர்வையுள்ள உள்ளாடைகள் அணிந்திருப்பது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம்.
நிர்வாணமாக தூங்குவதால்,கலோரிகளை எரிக்கும் திறன் உடலில் அதிகரிக்கும்.
ஆழ்ந்த உறக்கம் இருந்தால், சருமத்தை மேம்படுத்தும். மோசமான தூக்கம், காயத்திலிருந்து குணமடையும் தோலின் திறனைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது
பெரியவர்களுக்கு இடையிலான தோலிலிருந்து தோலுக்கான தொடர்பு ஆக்ஸிடாஸின் வெளியீட்டைத் தூண்டுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உங்கள் துணையுடன் நிர்வாணமாக தூங்குவது அற்புதமாக இருக்கும்.