நோய்கள் என்பவை பொதுவாக அனைவருக்கும் வரும் சளி காய்ச்சல் முதல் நீண்ட நாள் உடல் கோளாறுகள் என பல வகைகளில் பிரிக்கலாம். அவற்றில், குளிர்காலத்தில் அதிகமாக வரும் குளிர் இருமல் போன்றவற்றை வீட்டு வைத்தியம் மூலமாகவே சரி செய்துவிடலாம்
இருமல் மற்றும் சளியிலிருந்து விடுபட உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்ட இஞ்சி குளிர் காய்ச்சல் என குளிர்கால நோய்களை தவிர்க்க உதவும். இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்தால் போதும். இந்த இஞ்சி தேநீர், சளி, இருமல், தொண்டைக் கமறல் என பல பிரச்சனைகளுக்கு நல்லத் தீர்வு
அல்லிசின் என்ற ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ள பூண்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். பூண்டை ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்
வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்ல மருந்தாக செயல்படும். தேனில் இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், அதனுடம் வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை இணையும்போது, நோயெதிர்ப்பு வலுவாகும், தொண்டை பிரச்சனைகள் சரியாகும்
நீராவியை கொண்டு ஆவி பிடிப்பது சளியை சரி செய்யும். ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் எடுத்து அதில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைக் கலந்து ஆவி பிடித்தால் சளி மற்றும் இருமல் சரியாகும்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. இது உடலின் வெப்பத்தை சீராக்குவதுடன், வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும். இரவில் மஞ்சள் பாலை சூடாக குடித்தால் அதிக பலன் அளிக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை