உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அது மூட்டு வலி, கீல்வாதம் உட்பட இன்னும் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கும் நிவாரணமாக அமையும் சில எளிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
முருங்கைக் கீரையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி சிறுநீர் மூலம் பியூரிகளை வெளியேற்றுவதில் உதவுகின்றன. இவை மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
அதிக யூரிக் அமில அளவை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.
எலுமிச்சை நீர் யூரிக் அமில அளவை குறைக்க மிக உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, முழு கோதுமை, முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். இவை மூட்டு வலியை குறைப்பதிலும் உதவும்.
அதிக சர்க்கரை உள்ள பானங்களை தவிர்ப்பது நல்லது. இவை யூரிக் அமில அளவை அதிகரித்து வலியை தாங்கும் சக்தியை குறைக்கும்.
யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் சிவப்பிறைச்சி, இனிப்பான ப்ரெட் வகைகள், சில மீன் வகைகளை உட்கொள்ளக்கூடாது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.