கோடையில் மாரடைப்பு

கோடைக்காலத்தில் மாரடைப்புக்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே காணப்படுவதால் அவை நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

Sripriya Sambathkumar
Jun 20,2023
';

சைலண்ட் ஹார்ட் அட்டாக்

சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்பது அறிகுறிகள் இல்லாத அல்லது கண்டறியப்படாத மாரடைப்பின் நிலையாகும்.

';

ஆபத்தானது

இத்தகைய சைலண்ட் ஹார்ட் அட்டாக் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நோயாளி அதைத் தவிர்க்க நேரம் கிடைக்காது. அதன் பெரும்பாலான அறிகுறிகள் வெப்பத்தின் அறிகுறிகளைப் போலவே இருப்பதுவே இதற்கு காரணம்.

';

சுவாசிப்பதில் சிரமம்

சைலண்ட் ஹார்ட் அட்டாக்கின் முதல் அறிகுறி சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல். இதில் நோயாளி மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்வதோடு அதிக வேலை அல்லது வெப்பம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

';

லேசான வலி

சைலண்ட் ஹார்ட் அட்டாக்குக்கு முன், நோயாளி இடது கை-கால், தாடை, தோள்பட்டை அல்லது முதுகில் லேசான வலியை உணர்கிறார். இதனுடன், வயிற்றில் வலி இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

';

மார்பில் அழுத்தம்

மார்பில் குத்துவது, அழுத்தம் போன்ற உணர்வுகளும் அறிகுறிகளே. பெரும்பாலும் மக்கள் அதை அமிலத்தன்மை என்று கருதுகின்றனர்.

';

வியர்ப்பது

கோடைக்காலத்தில் வியர்ப்பது சாதாரண விஷயமாக மக்கள் கருதுகிறார்கள். ஆகையால் குளிர் வியர்வை வந்தாலும் மக்கள் சோதனை செய்வதில்லை. ஒருவருக்கு குளிர் வியர்வை மற்றும் பதட்டம் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story