கை விரலில் தெரியும் கொலஸ்ட்ரால் அறிகுறிகள்..!
கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். இது இரத்தத்தில் காணப்படுகிறது. இந்த கொலஸ்ட்ரால் செல் கட்டுமானத்திற்கு மிகவும் இன்றியமையாதது.
இயற்கையாகவே உடலுக்குத் தேவையான அனைத்து கொலஸ்ட்ராலையும் கல்லீரல் உருவாக்குகிறது. இது தவிர நாம் உண்ணும் உணவுகளின் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேர்கிறது.
இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகளவு சேர்ந்தால், அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதுவும் தற்போது ஆண்களிடையே மாரடைப்பின் அபாயம் அதிகரித்து வருகிறது. இதற்கு பார்ட்டி என்ற பெயரில் அவர்கள் ஹோட்டல் உணவுகளை அதிகம் உண்பது ஒரு முக்கிய காரணம்.
ஹோட்டல் உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகமாக நிறைந்திருக்கும். இப்படியான கொலஸ்ட்ரால் உணவுகளை உட்கொள்ளும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்தக்குழாய்களில் படியத் தொடங்கி, ஒரு கட்டத்தில் மாரடைப்பின் அபாயத்தை அதிகரித்துவிடுகின்றன.
ஆண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நகங்கள் மற்றும் விரல்களில் வெளிப்படுத்தும். கீழே கொலஸ்டரால் அதிகம் இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்த கொடுக்கப்பட்டுள்ளன.
விரல்கள் மற்றும் கை தசைநாண்களில் மஞ்சள் நிறத்தில் புடைப்புகள் தெரிகிறதா? அப்படியானால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படும் சாந்தோமஸ் என்று அழைக்கப்படும் இந்த மஞ்சள் நிற புடைப்புகளானது, மென்மையாக இருப்பதோடு, அளவுகளில் மாறுபடலாம். எனவே இப்படி உங்கள் விரல்களில் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இதன் விளைவாக வழக்கத்திற்கு மாறாக கைகள் மற்றும் விரல்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
இப்படி நீண்ட நாட்களாக கைகள் குளிர்ச்சியாக இருப்பதை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.