இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்றாக உறங்கும் நபர்களை விட பத்து மடங்கு அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரியான தூக்கம் இன்மையால் உடலில் ஹார்மோன் சுரப்பது பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சரியான அளவில் நடைபெறாமல் உடல் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
குறைந்த அளவில் தூங்கும் போது பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன இதில் முக்கியமான ஒன்று டிமான்டியா எனப்படும் நோய்.
இரவில் தாமதமாக எழுவதும் பொதுவான மனநோய்க்கு ஆளாகலாம். உங்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனப் பிரச்சனைகள் இருக்கலாம்.
போதுமான தூக்கம் இல்லையெனில் அவை நேரடியாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது உங்களது சுவாசக் குழாய் மற்றும் மூச்சு விடுவது சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.