பெண்கள் புகைபிடிப்பதற்கு அடிமையானால் என்ன ஆகும்?

';


இன்றைய காலகட்டத்தில் பெண்களும் புகை பிடிக்கின்றனர். ஆண்களுக்கு போட்டியாக இதை சிலர் செய்கின்றனர்.

';


ஆனால், புகைப்பழக்கத்தைக் கைவிடுகையில் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாகவும், கடினமாக உணர்வதாகவும் கென்டக்கி பல்கலைக்கழகம் (University of Kentucky) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

';


சாலி பாஸ் என்பவரின் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் பெண்களின் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், நிகோடினுக்கு அடிமையாவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு கூறுகிறது.

';


அதாவது, ஆண்களை விட பெண்கள் புகையிலையிலுள்ள நிகோட்டினுக்கு (Nicotine) வேகமாக அடிமையாகிவிடுகின்றனர். மூளையிலுள்ள ஆல்ஃபாக்டோமெடின் என்ற புரதத்தின் உற்பத்தியை நிகோடின் குறைக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஆல்ஃபாக்டோமெடின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

';


ஆல்ஃபாக்டோமெடின், ஈஸ்ட்ரோஜென், நிகோடின் இந்த மூன்று கூறுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெண்கள் நிகோட்டினுக்கு அடிமையாகின்றனர். அதனால் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது அவர்களுக்குக் கடினமாகவுள்ளது.

';


இது குறித்து சாலி பாஸ் கூறுகையில், ``ஆல்ஃபாக்டோமெடின்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், நிகோடின் நுகர்வை இயக்குகிறது என்பதை நாம் உறுதிப்படுத்த முடிந்தால், அந்த விளைவைத் தடுக்கக்கூடிய மருந்துகளை நாம் வடிவமைக்க முடியும்.

';


இந்த மருந்துகள் பெண்கள் நிகோட்டின் பழக்கத்திலிருந்து வெளிவருவதை எளிதாக்கும். ஆண்களை விட பெண்களுக்கு நிகோடினுக்கு அடிமையாவதில் அதிக நாட்டம் இருப்பதாகவும், அதை விட்டுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிகிறது.

';


எங்களது வேலை நிகோட்டின் பயன்பாடு பெண்களை எவ்வாறு பாதிக்கிறது, அடிமையாக்குகிறது என்பதை அறிந்து, நிகோட்டின் அடிக்ஷனுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார்.

';

VIEW ALL

Read Next Story