எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியமாக கருதப்படும் சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தூக்கமின்மையால் லெப்டின் என்ற ஹார்மோன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, உடல் எடை அதிகரிக்கும்.
காலை உணவு உட்கொள்ளாததால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதுடன் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
தேவைக்கு அதிகமாக மன அழுத்தம் அதிகரித்தால், அது கார்டிசோலின் அளவையும் அதிகரிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் எடையை அதிகரிக்கிறது.
தண்ணீர் உடலில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடல் எடை கூடும்.
புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு நபரின் எடை 3-4 கிலோ வரை அதிகரிக்கும். ஆனால் புகைபிடிப்பதை விட்டுவிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதை விட அதிகம்.
அதிக உணவு உண்பவர்களுக்கு மட்டும் உடல் பருமன் ஏற்படாது, குறைவாக சாப்பிடுபவர்களும் உடல் பருமனாக மாறலாம்.
தேவை இல்லாமல் மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கும்.