லவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பூசணி விதைகள், ஆண்களின் உடல் நல பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆண்களில் மலட்டுத்தன்மை மற்றும் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பூசணி விதை சிறந்த உணவு பொருளாகும்.
பூசணி விதைகளில் அதிகம் ஸிங்க் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்கிறது.
நீங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், பூசணிக்காய் விதைகள் உட்கொள்வது அவசியம்.
விந்தணுக்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஜிங்க் பற்றாக்குறையும் ஒன்று. அவை இந்த பூசணி விதையில் அதிகமாக இருககிறது.
ஆண்கள் மலட்டுத் தன்மை பிரச்சினை ஏற்படாமல் இருக்க தினசரி சிறிதளவு பூசணி விதையை பச்சையாகவோ, வறுத்தோ அல்லது ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.
பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
பூசணி விதைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆற்றலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் உடல் எடையும் குறையும்.
பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை புற்று நோயை தடுக்க உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
பூசணி விதைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதோடு, இதை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை வியாதி வராது.