யூரிக் அமிலம் என்பது உடலில் உள்ள ப்யூரின்கள் எனப்படும் இரசாயனங்களின் முறிவின் துணைப்பொருளாகும்.
யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில பருப்பு வகைகளை பற்றி இங்கே காணலாம்.
உளுந்தை அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள அதிக புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் செழுமையின் காரணமாக யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கக்கூடும்.
இதில் அதிக புரதம் இருப்பதால் அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்கள் துவரம் பருப்பை உட்கொள்வதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த பருப்பை அதிகமாக உட்கொள்வதால் யூரிக் அமிலத்திற்கு வழிவகுக்கும் ப்யூரின் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சோயா அல்லது சோயா புரதம் சீரம் யூரிக் அமிலத்தை விரைவாக அதிகரிக்கும் என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்கள், காராமணியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் கீல்வாதத்திற்கு பங்களிக்கும் பியூரின்கள் அதிகமாக உள்ளன.