வொர்க்அவுட்டிற்கு முன்பு சிற்றுண்டிகள் உண்அதால், கிரெலின் என்ற பசி ஹார்மோனின் அளவு குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பசி குறைவதால், எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்
உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டியில் கார்போஹைட்ரேட் நிறைந்ததாக இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் உடலில் எரிபொருளாக வேலை செய்து கொழுப்பை எரிக்கிறது
உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. எனவே பழங்களை உடற்பயிற்சிக்கு முன்பு உண்பது நல்லது
உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேறும். எனவே உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். உடற்பயிற்சிக்கு முன் நீர்ச்சத்துள்ள பானங்களை அருந்தலாம்
உடற்பயிற்சிக்கு முன்பு புரதம் உண்பது நல்லது. புரதம் உண்பதால் அமினோ அமிலங்களும் உடலுக்குக் கிடைக்கும். இது தசைகளை பாதுகாக்கும்
ஊட்டச்சத்துக்கள் கொண்ட பானமான இளநீர், உடற்பயிற்சிக்கு முன்னர் குடிப்பது நல்லது
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவுகிறது
உடற்பயிற்சிக்கு முன்னதாக கருப்பு காபி குடிப்பது நல்லது
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை