சில படிகள் ஏறி இறங்கினால் மூச்சு வாங்குவது நல்ல அறிகுறி அல்ல.
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலின் உறுதியை அதிகரிக்க வேண்டும்.
யோகாசங்கள் மூலம் தசைகளை வலுப்படுத்தி உடல் உறுதியை அதிகரிக்கலாம்.
தினமும் சில ஆசனங்களை சில நிமிடங்களுக்கு செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும்.
நவ்காசனம் நம் உடலின் கீழ் பகுதிகளை வலுப்படுத்தி தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
சேதுபந்தாசனம் பின் பகுதியை ஸ்ட்ரெட்ச் செய்து தசை வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
உஸ்த்ராசனம் பின் பகுதி, இடுப்பு, மார்பு, தோள் ஆகிய பகுதிகளில் வலிமையை அதிகரிக்கின்றது.
சர்வாங்காசனம் இரத்த போக்கை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களின் வலிமையையும் அதிகரிக்கின்றது
பத்மாசனம் உடல் உறுதியை அதிகரிக்கிறது. இது முதுகெலும்பிற்கும் இரத்த ஓட்டத்திற்கும் நல்லது