வாழைப்பழம் மிகவும் சத்தான பழம் என்றாலும், அளவிற்கு அதிகமான வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.
ஆஸ்துமா உள்ளவர்கள் அளவிற்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும்.
வைட்டமின் பி6 நிறைந்த வாழைப்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் நரம்பு பாதிப்பு ஏற்படலாம்.
அமினோ ஆசிட் நிறைந்த வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் சுறுசுறுப்பு இல்லாத நிலை ஏற்படும்.
இயற்கை சர்க்கரை, மாவுச்சத்து அதிகம் கொண்ட வாழைப்பழத்தை அதிக அளவு சாப்பிடும் போது பல் சொத்தை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தை அதிகம் உண்ணும் போது ரத்தத்தில் பொட்டாசியம் தேவைக்கு அதிகமாக அதிகரித்து பிரச்சனையை ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தில் அதிக கலோரிகள் இருப்பதால், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.