வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ., மெக்னீசியம், ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் பப்பாளி!
பப்பாளியில் உள்ள பப்பெய்ன் என்ற நொதி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கவும் நினைவாற்றல் அதிகரிக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் உள்ளன
பழமாக மட்டுமல்ல, காயாகவும் பப்பாளியை பயன்படுத்தலாம். அதேபோல, பப்பாளியை ஜூஸாக செய்தும் பருகலாம். எப்படி சாப்பிட்டாலும் முழு ஊட்டச்சத்துக்களையும் குறைக்காமல் கொடுப்பது பப்பாளி. ஆனால், காலையில் வெறும் வயிற்றில் உண்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்
வெறும் வயிற்றில்பப்பாளியை உண்பது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. அப்போது, கிளைசெமிக் கட்டுப்பாடும் சிறப்பாக இருக்கிறது
பப்பாளியில் உள்ள பப்பேன் போன்ற என்சைம்கள் திறமையாக செயல்பட்டு. புரத செரிமானத்தை மேம்படுத்தும் வேலையைச் செய்கின்றன
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவை மிகவும் தரமானவை. காலையில் ஊட்டச்சத்தான பழத்தை உட்கொள்வது, சருமத்தை உள்ளிருந்து ஊட்டச்சத்துமிக்கதாக்கி, பளபளப்பைக் கூட்டுகிறது
உடல் வீக்கத்தைக் கட்டுப்படுத்த பப்பாளியை காலையில் உண்பது நல்லது