கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நெல்லிக்காய் மிக நல்லது. இதை தினமும் உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ஓட்ஸ் மிக பயனுள்ளதாக இருக்கும். கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவாக இது பார்க்கபப்டுகின்றது.
அக்ரூட் பருப்பு கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை தினமும் உட்கொள்வது நல்லது.
தினமும் ஒரு கிளாஸ் நீரில் 2 அல்லது 3 எலுமிச்சை பழங்களின் சாறை பிழிந்து குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய ஆரோக்கியம் மேம்பட்டு எடை இழப்பிலும் உதவி கிடைக்கும்.
தினமும் 1 அல்லது 2 பல் பூண்டை உட்கொள்வது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். பூண்டில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
சியா விதைகள், ஆளி விதைகள் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு எடை இழப்பில் உதவி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.