கடும் கோடையில் சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதால், நீரிழிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்வதோடு, எண்ணற்ற ஊட்டசத்துக்களையும் பெறலாம்.
கோடையில் சாத்துக்குடி ஜூஸ் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், ஆற்றலையும் இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.
கால்சியம் சத்து குறைவால் ஆஸ்டியோபோரேசிஸ், ஆர்த்ரேடிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்க சாத்துக்குடி உதவும்.
இயற்கையான அமிலத்தன்மை கொண்ட சாத்துக்குடி செரிமானத்தை மேம்படுத்தும் நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
சருமம் மற்றும் தலைமுடி இரண்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முதுமை அண்டாமல் தடுக்கிறது.
சாத்துகுடியில் உள்ள லிமோனின் குளுகோசைடு எனப்படும் பிளேவனாய்டுகள் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் பண்பை கொண்டுள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.