எந்த ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது? தடா போடும் வைட்டமின்கள்

Malathi Tamilselvan
May 16,2024
';

ஊட்டச்சத்துக்கள்

உடலின் வளர்சிதை மாற்றம் தான் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையால் உடல் எடையில் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படுகிறது

';

உணவு

எந்த ஊட்டச்சத்து குறைபாடு, உடல் எடை குறைப்பை பாதிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்

';

வைட்டமின் டி

உடலில் வைட்டமின் டி குறைந்தால் வளர்சிதை மாற்றம் மெதுவாகும். போதுமான அளவு வைட்டமின் டி உடலுக்குக் கிடைத்தால்வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தினமும் 20 நிமிடம் வெயிலில் நடந்தால் வைட்டமின் டி உடலுக்கு போதுமான அளவு கிடைக்கும்

';

வைட்டமின் பி12

உணவில் இருந்து பெறப்படும் கார்போஹைட்ரேட்டை உடைக்கவும், வளர்சிதை மாற்றத்திற்கும் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. வைட்டமின் பி 12 புரதங்கள் மற்றும் கொழுப்புகளை ஜீரணிக்க மிகவும் முக்கியமானது.

';

புரதம்

என்சைம்களை ஒருங்கிணைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் புரதத்தின் பங்கு முக்கியமானது. போதுமான புரதத்தைப் பெறாதது வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைத்து எடை குறைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

';

இரும்புச்சத்து

உடலுக்கு பலம் கொடுக்கும் இரும்புச்சத்து, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. பலவீனம் இல்லாமல் இருக்க இரும்புச் சத்தும் மிகவும் அவசியம். பேரீச்சம்பழம், தானியங்கள், கருப்பு திராட்சை மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் அதிக இரும்புச்சத்து உள்ளது

';

சமச்சீர் உணவு

உண்ணும் உணவு ருசியானதாக இருக்கிறதா என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சமச்சீர் உணவாக இருக்கிறதா என்ற விஷயத்திற்குக் கொடுத்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story