சீரகம் அகத்தை சீர் செய்யும் தன்மை கொண்டது. செரிமான கோளாறுகளை அகற்றி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு. அதே போல் தான் ஒப்பற்ற சீரகம், அளவிற்கு அதிகமானால் ஆரோக்கியத்தை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் அளவிற்கு அதிகமாக சீரகத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகள் மட்டுமல்லாது பகலூட்டும் தாய்மார்களும், சீரகம் எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை.. ஏனெனில் இது பால் சுரப்பை பாதித்துவிடும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அளவிற்கு அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டால், உதிரப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
சீரகம் அளவிற்கு அதிகமானால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, எரிச்சலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
சீரகத்தில் கார்பனேட் விளைவு இருப்பதால், அளவிற்கு அதிகமாகும் போது ஏப்பம் வர காரணமாகிறது.
நீண்ட காலத்திற்கு அதிக அளவிலான சீரகத்தை பயன்படுத்தி வந்தால், கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் உண்டு என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.