இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில எளிய டிப்ஸை இங்கே காணலாம்.
சுகர் நோயாளிகள் கண்டிப்பாக தாங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவை தொடர்ந்து குறைக்க வேண்டும். இது எடையை இழக்கவும் உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது வயிற்றுக்கு நீண்ட நேரம், நிரம்பிய உணர்வை அளித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறைந்த க்ளைசெமிக் குறியீடுள்ள, அதிக சர்க்கரை இல்லாத பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கொய்யாப்பழம், ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி போன்றவற்றை உட்கொள்ளலாம்.
சுகர் நோயாளிகள் தங்களை அதிக நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் உடலில் போதுமான நீர் இல்லையென்றால், குளூக்கோஸ் அளவு அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும், உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா போன்ற ஏதாவது ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்.
சுகர் அதிகமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடுவது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 3-5 மணி நேரத்திற்கு ஒரு முறை குறைந்த அளவில் லேசான உணவுகளை உட்கொள்வது சுகர் அளவை பராமரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.