உயிரற்ற நரம்புகளுக்கு உயிரை கொடுக்கும் திறனுள்ளது நட்சத்திர சோம்பு. இது நரம்புகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் நரம்புகளுக்கு வலிமையை அளிக்கிறது.
விட்டமின் கே மற்றும் கொலின் அதிகமுள்ள ப்ரோக்கலி நரம்புகளை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாமல், எல்லாருமே தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விட்டமின் ஏ, சி அதிகமுள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கு செல்களுக்கு ஆக்ஸினேற்ற பாதுகாப்பை வழங்கி நரம்புகளை வலுப்படுத்துகிறது.
குயினோவாவில் நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பொட்டாசியம் மட்டுமல்லாது, இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் ஆகியவையும் நிறைந்துள்ளன.
தாமரை விதையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தாலும், இந்த நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகள் அனைத்தும் குணமாகி விடும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.