ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்கும் மசாலாக்கள் உடல் எடை குறைய பெரிதும் உதவுவதோடு, ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
அகத்தை சீராக்கும் சீரகம் செரிமான அமைப்பை வலுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் கொழுப்பை எரிக்க பெரிதும் உதவுகிறது.
உணவிற்கு காரத்தை கொடுக்கும் மிளகாய் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பை எரிக்கிறது.
மஞ்சள் செரிமானத்தை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது.
பெருஞ்சீரகம் இயற்கையான டையூரிடிக் மருந்தாக இருப்பதால், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி எடையை குறைக்கிறது.
கருமிளகில் உள்ள பைபரின் கூறு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது. உடல் ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
ஏலக்காய் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது. உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. உங்கள் காலை தேநீர் மற்றும் கிரீன் டீயில் ஏலக்காயை சேர்க்கலாம்.
இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்ற விகிதத்தை ஊக்குவிப்பதோடு, பசியை கட்டுப்படுத்தி கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.