கருவளையத்தைப் போக்க காஸ்மெட்டிக்ஸ் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றில் உள்ள இரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம்.
கண்ணழகை பாதிக்கும் கருவளையங்கள்! உணவுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளைக் கொண்டே கண் அழகை மேம்படுத்தலாமே?
கருவளையங்களை நீக்குவதில் தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வைட்டமின் சி, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயதாவதை தடுக்கும் பண்புகள் உள்ளன, இது சருமத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது
சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், கருவளையப் பிரச்சனையை நீக்கவும் தேவையான பண்புகள் உள்ள தக்காளியை முகத்தில் தடவினால், சருமம் பளபளப்பாகவும், களங்கமற்றதாகவும் இருக்கும்
கருவளையங்களை நீக்க தக்காளி ஜூஸ் எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களுக்குக் கீழே தடவி 15-20 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் போயே போச்சு!
கண்களின் கருவளையத்தைப் போக்க வெள்ளரிக்காயை வெட்டி, கண்களின் மீது வைத்தால் வளையங்கள் மறைந்துவிடும். கண்களுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்
சிறந்த ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்ட உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, அதை கருவளையத்தின் மேல் 10 நிமிடம் வைத்து கழுவவும். கருவளையங்களை போக்கும் அருமையான வழி இது
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை