40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்கவும், தொப்பையை கட்டுப்படுத்தவும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
40 வயதிற்கு மேலானவர்கள் ஓட்ஸ், பீன்ஸ், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து அதன் மூலம் நார்ச்சத்தை சேர்க்கலாம்.
தொப்பையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தொப்பையை குறைப்பதிலும், தசைகளை வளர்ப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைவான தூக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இது அடிவயிற்றில் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தை சமாளிக்க தினமும் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சியும் செய்யலாம்.
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை சீராக்கி கூடுதல் கொழுப்பை குறைக்கும்.
40 வயதிற்கு மேல் மதுபான உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். மதுபனம் உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது
தொப்பையை குறைக்க, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். இதில் கலோரிகள் குறைவாகவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ளன.